Wednesday, August 17, 2011

trying to imitate the Great



Thursday, August 02, 2007

புகைப்பட போட்டி படங்கள்



பொரட்ரைட் எனக்கு பிடித்தமான Genre...2 படங்கள் தான் போட முடியும் என்பதால் Archives ல் தேடக் கூடவில்லை.







Saturday, June 19, 2004

புதுவை சுற்றுலா

புதுவை சுற்றுலா


திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட அழகான நகரம் புதுவை. நகருக்கு அழகு சேர்க்கும் வகையில் நேர், குறுக்குத் தெருக்கள்! சுற்றலூ பயணிகளைக் கவரும் வகையில் கிழக்குக் கடற்கரைச் சாலை!

'தெரிந்த விஷயம்தானே இது!' என்று எண்ணுகின்றீர்களா? புதுவையைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள வேண்டுமா?

அரிக்கன் மேடு : பிரெஞ்சு-இந்திய வியாபாரத் தளத்தின் தலைமையகமாக விளங்கிய புதுவை, சரித்திரப் புகழ் பெற்றதாகும். 2000 ஆண்டுகளுக்கு முன், ரோமானிய பேரரசு அமைத்து, 'மத்தியத் தரைக்கடல்' ஓரப் பெரும் பகுதியை ஆட்சி புரிந்தவர்கள் ரோமர்கள். ரோமர்களுடன் தமிழர்கள், வணிகத் தொடர்பு இருந்ததற்கான ஆதாரம் கிடைத்தப் பகுதிகளில் ஒன்று அரிக்கன்மேடு. இங்குதான் அகழ்வாராய்ச்சியின் மூலம், ரோமர்களின் நாணயங்கள் மற்றும் பண்டைய தமிழர்களின் பொருள்கள் கிடைத்துள்ளன. புதுவையிலிருந்து 6 கி;.மீ. தொலைவில் உள்ள அரியாங்குப்பம் வரை பஸ்சிலும் பின்னர் 2 கி.மீ. து}ரம் ஆட்டோவிலும் செல்லலாம்.

அருங்காட்சியகம் : ஆளுநர் மாளிகை அருகே, புதுவை அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இங்கு அரிக்கன் மேடு அகழ்வராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்கள், மற்றும் புதுவை வரலாற்றைப் பறைசாற்றும் பொருள்கள் இடம்பெற்றுள்ளன.

ஆயி மண்டபம் : புதுவை சட்டப்பேரவை எதிரில் கோடையில் பயணிகள் களைப்பாற உதவும் 'பாரதி பூங்கா' உள்ளது. இந்தப் பூங்காவில் 'ஆயி மண்டபம்' உள்ளது.

ஆயி மண்டப வரலாறு: 16-ம் நு}ற்றாண்டில் ஏரோப்பியர்களுக்கு 'அதிசய உலக'மாகத் திகழ்ந்தது தென்னகத்தின் விஜயநகர பேரரசு! விஜயநகரப் பேரரசர் கிருஜ்ணதேவராயர், ஒருநாள் முத்தரையர்பாளையம் வழியாக வந்தபோது ஒரு வீட்டின் முன்பு விளக்குகள் ஜொலித்தன. அதைக் கண்ட பேரரசர், அந்த இடத்தை 'புனிதமான இடம்' என்று நினைத்து வணங்கினார். அது ஆயி என்னும் விலைமகளிர் வீடு என்று பின்னர் தெரிந்து கோபம் அடைந்த பேரரசர் அந்த வீட்டை இடித்துத் தள்ளுமாறு உத்திரவிட்டார். அந்த விலைமாது, பேரரசரிடம் மன்னிப்புக்கேட்டு, பின் தானே வீட்டை இடித்துவிட்டு அப்பகுதியில் குடிநீர்த் தேக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். புதுவை மக்கள் பலர் அருந்தும் நீரும், 'சுடரொளி' வாசகர்கள் பலர் குடித்து வளர்ந்ததும் இந்நீர்தான்!

300 ஆண்டுகளுக்குப் பிறகு இதைக் கேள்விப்பட்ட பிரான்ஸ் மாமன்னர் 3-வது நெப்போலியன் ஆயிக்கு மண்டபம் கட்டுமாறு உத்தரவிட்டார். அதுதான் ஆயி மண்டபம்.

பாரதியார் வீடு : புதுவை ஈஸ்வரன் கோயில் வீதியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த வீடு, அவரது பெயரில் அருங்காட்சியகமாக உள்ளது.

பாரதிதாசன் வீடு : பெருமாள் கோயில் தெருவில் வாழ்ந்த பாவேந்தர் பாரதிதாசன் வீடு அவரது பெயரில் அருங்காட்சியகமாக உள்ளது.

புதுவை கடற்கரைச் சாலையில் காந்தி சிலை, துய்ப்ளெக்ஸ் சிலை, பிரான்ஸ் நாட்டிற்காக உயிர்துறந்த போர்வீரர்கள் நினைவுச் சின்னம், கார்கில் நினைவு ஸ்து}பி உள்ளிட்ட இடங்கள் பார்க்க வேண்டிய இடங்கள். பழைய பஸ் நிலையம் அருகே தாவரவியல் பூங்கா உள்ளது. இங்கு 200 ஆண்டுகளுக்கு முந்தைய 7 மரங்கள் உள்ளன. இப்பூங்காவில் சிறுவர்கள் ரெயில் உள்ளது.

புதுவையிலிருந்து 10 கி.மி. தொலைவில் கடலு}ர் சாலையில் சுண்ணாம்பாறு உள்ளது. இங்கு படகு சவாரி செய்து கடல் கழிமுகப் பகுதியைப் பார்வையிடலாம்.

கடற்கரைச் சாலையில் புதுவை சுற்றுலாத்துறை அலுவலகத்திலிருந்து புதுவையின் முக்கிய பகுதிகளை சுற்றிப் பார்க்க பஸ் வசதி உள்ளது. காலை 9.15 முதல் மாலை 5.30 வரை பஸ்சில் சென்று முக்கிய இடங்களை பார்வையிட கட்டணம் 100 ரூபாய்.


புதுவை, பக்தர்களைக் கவரும் ஆன்மீக பூமி கூட !

அரவிந்தர் ஆசிரமம் : மணக்குள விநாயகர் கோயில் அருகில் அரவிந்தர் ஆசிரமம் உள்ளது. புதுவையிலிருந்து 8 கி.மீ. து}ரத்தில் தமிழகப் பகுதியில் ஆரோவில் உள்ளது. இங்கு உருண்டை வடிவில் மாத்ரி மந்திர் உள்ளது. இது அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளமாகத் திகழ்கின்றது.

இந்துக் கோயில்கள் : புதுவையில், பாரதியார் பாடிய மணக்குள விநாயகர் கோயில், மற்றும் வரதராஜ பொருமாள் கோயில், வேதபுhPஸ்வரர் கோயில்கள் உள்ளன. சரித்திரப் புகழ்பெற்ற திருக்காமேஸ்வரர் கோயில் வில்லியனு}ரிலும், செங்கழனீர் அம்மன் கோயில் வீராம்பட்டிணத்திலும் உள்ளன. புதுவை திண்டிவனம் சாலையில் திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு அருகே மொரட்டாண்டி பகுதியில் 72 அடி உயர காளி சிலை கோயில் உள்ளது.

கிறிஸ்துவ ஆலயங்கள் : புதுவை ஜென்மராக்கினி அன்னை ஆலயம், திரு இருதய ஆண்டவர் ஆலயம், சம்மனசு அன்னை ஆலயம், வில்லியனு}ர் லு}ர்து அன்னை ஆலயம், நெல்லித்தோப்பு மோட்சராக்கினி அன்னை ஆலயம், ரெட்டியார் பாளையம் காணிக்கை அன்னை ஆலயம், உழவர்கரை ஜெயராக்கினி அன்னை ஆலயம், அரியாங்குப்பம் ஆரோக்கிய அன்னை ஆலயம்;, வினோபா நகர் புனித சு10சையப்பர் ஆலயம், உப்பளம் சவேரியார் ஆலயம், குருசுக்குப்பம் புனித பிரான்சிஸ் அசீசி ஆலயம், தாகூர் நகர் பரிசுத்த ஆவி ஆலயம், ஆட்டுப்பட்டி புனித அந்தோனியார் கோயில் இன்னும் சில கோயில்களும் புதுவை கிறிஸ்துவர்களின் புனித தளங்களாகும்.

புதுவையிலிருந்து 68 கி.மீ. தொலைவில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயிலும், 70 கி.மீ. து}ரத்தில் உள்ள செஞ்சிக் கோட்டையும் காணவேண்டிய இடங்களாகும். செஞ்சியிலிருந்து 40-கி.மீ. தொலைவில் உள்ள திருவண்ணாமலை அருணாசலேசுவரர் ஆலையம் காண கண்கோடி வேண்டும்.

பிரான்சிலிருந்து வெளிவரும் சுடரொளி மாத இதழில், இந்த சுற்றுலா கட்டுரை துரin 2004 இதழில் வெளிவந்துள்ளது.

எழுதியது ரவியா